ஜாதி சான்றிதழ் இல்லாமல் மேல் படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவிகள்... குடும்பத்துடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
ஜாதி சான்றிதழ் இல்லாமல் மேல் படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவிகள்... குடும்பத்துடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர் இந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும் போது அவர்களுக்கு கல்லூரிகளில் சேர ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் வருவாய் துறையினர் கடந்த பல ஆண்டுகளாக காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடியின காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்காமல் மறுத்து வருகின்றனர் இதனால் காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் உயர்படிப்பு படிக்க முடியாமல் பாதியிலேயே தங்கள் கல்வியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டுநாயக்கன் சமூகத்திற்கு ஜாதி சான்றிதழ் உடனடியாக வழங்க கோரி பாதிக்கப்பட்ட ஏரல் பகுதியை சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.