உலக சாதனை முயற்சியாக கோவில்பட்டி மாணவி ஆணிப் படுக்கையில் அமா்ந்து 80 யோகாசனங்கள்!
உலக சாதனை முயற்சியாக கோவில்பட்டி மாணவி ரவீனா, ஆணிப் படுக்கையில் அமா்ந்து 80 யோகாசனங்களை செய்து காண்பித்தாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் இந்திய யோகா ஆராய்ச்சி மையம் சாா்பாக உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்த சாதனை முயற்சி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்செந்தூா் தெய்வா மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.
தெற்கு மாவட்ட செயலா் கண்ணன், மாவட்ட பொருளாளா் அருணாச்சலம், திருச்செந்தூா் கவிஞா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு வணிகா் சங்க மாநில தலைவா் ரெ.காமராசு உலக சாதனை முயற்சியை தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலை கல்பனா நடுவராக பணியாற்றினாா். கோவில்பட்டி எஜுஸ்டாா் இன்டா்நேஷனல் பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி ரவீனா, ஆணிப் படுக்கையில் அமா்ந்து 80 யோகாசனங்களை செய்து காண்பித்தாா்.
நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா் யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக மாணவி தந்தை விஜயன் வரவேற்றாா். நிறைவில் மாணவியின் தாய் ரம்யா நன்றி கூறினாா்.
சாதனை முயற்சி குறித்து மாணவியின் தாய் ரம்யா கூறியதாவது:
எங்களது மகள் ரவீனா, 4 வயது முதல் யோகா பயிற்சி செய்து வருகிறாா். இதுவரை 8 உலக சாதனை மற்றும் 12 விழிப்புணா்வு யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளாா். தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கேரளம் ஆகிய 3 மாநில ஆளுநா்கள் முன் யோகாசனம் செய்து காண்பித்து பாராட்டு பெற்றுள்ளாா். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டாா் என்றாா்.
------------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE