தூத்துக்குடியில் புதியதாக 2758 தெரு விளக்குகள் 30 இடங்களில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்படும் : மேயர் ஜெகன் தகவல்..!

தூத்துக்குடியில் புதியதாக 2758 தெரு விளக்குகள் 30 இடங்களில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்படும் : மேயர் ஜெகன் தகவல்..!

தூத்துக்குடியில் புதியதாக 2758 தெரு விளக்குகள் 30 இடங்களில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது, மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடி 

வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் முன்பு உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் நீதிமன்றம் முன்பிருந்து இராஜாஜி பூங்கா வரை மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பத்திரப்பதிவு துறை அலுவலகம் வரை பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவின் படி மின்விளக்கு அமைப்பது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட பின் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2021 ல் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற காலம் தான் பொற்காலம் என்று எல்லோரும் கூறும் அளவிற்கு புறநகர் பகுதியான ஐந்து கிராம பகுதிகளில் உள்ள ஊர்கள் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் வளர்ச்சிப் பணிக்கான எந்த திட்டங்களையும் முறைப்படுத்தாமல் கடமைக்கு பணியாற்றி விட்டு, சென்று விட்டனர். மக்கள் பிரதிநிதிகளாக நான் உட்பட அறுபது வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் 4 ½ ஆண்டு காலம் திமுக ஆட்சியில் சாதனைகள் அதிகம். மாநகராட்சிப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 45 மாதங்கள் அனைத்துப் பகுதிகளுக்கும், கேட்கின்ற கட்டமைப்புப் பணிகளை 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம்.

     அதுவும் குறிப்பாக சாலை கழிவுநீர்க் காழ்வாய், பேவர் பிளாக் சாலை அமைத்து தெருக்கள் என பல உருவாக்கிய நிலையில் புறநகர் பகுதியும் வளர்ச்சியடைந்து வருவதை கருத்தில் கொண்டு 2758 புதிய மின் விளக்குகள் அமைத்துள்ளோம். மேலும் பல பகுதிகளுக்கு ஜனவரியில் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. இதே போல மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் அதி நவீன உயர் மின்கோபுர ஹைமாஸ்க் விளக்கு பொதுமக்கள், வணிகர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி சாலை மேம்பாலம் பகுதி, மாப்பிளையூரணி சந்திப்பு என முப்பது இடங்களில் தற்போது அமைத்துள்ளோம். மேலும் 20 இடங்களில் புதியதாக இதுபோன்று அமைக்கப்பட இருக்கிறது. பொதுமக்கள் அச்சமின்றி வந்து செல்வதற்கு இரவை பகல் போன்று இருக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள், வணிகர்கள், பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை மேலும் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்கலாம் என்று கூறினார்.

ஆய்வின் போது பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட தொண்டரனி துணை அமைப்பாளர் ராமர், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லாரன்ஸ், போல்பேட்டைப் பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.