உல்லாச விடுதியில் தங்கும் இளம்பெண்கள்: கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக புகார்!

உல்லாச விடுதியில் தங்கும் இளம்பெண்கள்: கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக புகார்!

உல்லாச விடுதியில் தங்கும் இளம்பெண்கள்: கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக புகார்!

தூத்துக்குடியில் பெற்றோருக்கு தெரியாமல் இளம்பெண்கள் உல்லாச விடுதியில் தங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாா் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு நாடாா் பேரவை மாவட்ட செயலாளா் மாியப்பன், தலைவா் ரவிசேகா் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி பெரிய மார்க்கெட் நடைபாதை மற்றும் வாகன நிறுத்தம் பற்றி மார்க்கெட் வரும் வியாபாரிகள் மூடைகள் தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள கார் பார்க்கில் செல்ல முடியாது. அதனால் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் நிறுத்தி பொருட்களை வாங்கி செல்ல அனுமதி அளிக்க வேண்டும். வஉசி மார்க்கெட்க்கு பஸ் வருவதில்லை. அதனால் அங்குள்ள வியாபாரிகள் மிகவும் நஷ்டம் அடைந்து உள்ளார்கள்.

சேர்வைகாரன்மடத்தில் உள்ள உல்லாச விடுதியில் தமிழக கலாச்சாரம் சீரழியும் வகையில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் தாய்-தந்தைக்கு தெரியாமல் தங்குகிறார்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் செபத்தை சரவணன், மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகவேல், மாநகர செயலாளர் பட்டுராஜா, மற்றும் வஉசி மார்க்கெட் வியாபாரிகள் பலா் கலந்து கொண்டார்கள்.