தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றும் விவகாரம்: தமிழக அரசை கண்டித்து சிபிஎம் போராட்டம்..!

தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றும் விவகாரம்: தமிழக அரசை கண்டித்து சிபிஎம் போராட்டம்..!

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 ‘பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம்’ திட்டத்தின் கீழ், எட்டு தளங்களில் 687 படுக்கைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.136.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.16 கோடியில் ஹைடெக் நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வாங்குவதற்கும், குடிமைப் பணிகளுக்கு ரூ.118.35 கோடி செலவிடப்படும் மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் வகையில் 95 சதவீத கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இதனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மருத்துவமணையாக மாற்றம் செய்து சுகாதாரத்துறை அரசானை வெளியிட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்,

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் கட்டபட்ட சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையை மக்ப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனியாக மாற்றம் செய்து வெளியிட்ட அரசானையை திரும்ப பெற வேண்டும், தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக செயல்படும் வகையில் அரசானை வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் புதன்கிழமை சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூணன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன், தூத்துக்குடி மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கு.ரவீந்திரன், தா.ராஜா, த.சன்முகராஜ், பா.புவிராஜ், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், புறநகர் செயலாளர் முனியசாமி, ஆழ்வை ரவிச்சந்திரன், திருவைகுண்டம் நம்பிராஜன், கோவில்பட்டி ஒன்றியம் தெய்வேந்திரன் , கருங்குளம் மனி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, மாரியப்பன், கிருஷ்ணவேனி, சுரேஷ், இனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.