களப்பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அட்டனன்ஸை கைவிட கோரி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
மாப்பிள்ளையூரனியில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாப்பிள்ளையூரனியில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 பதவி உயர்வு வழங்க அதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்திட வேண்டும், நிலுவையில் உள்ள 1002 சுகாதார ஆய்வாளர் நிலை 1 பனிகளுக்கான ஒப்பளிப்பு கூறும் இயக்குனரகத்தின் கருத்துருவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும், ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடியை 5700 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஊதிய தொடராணை வழங்கிட வேண்டும், சுகாதார நிலைய 1 பணியிடங்களை நிரப்பிட வேண்டும், காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 02.08.2019 நாளிட்ட அரசாணை எண்.137 னை ரத்து செய்ய வேண்டும், தகுதியுள்ள நபர்களுக்கு காலியாக உள்ள இளநிலை பூச்சியல் வல்லுநர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள நலக் கல்வியாளர் பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்க வேண்டிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும், களப்பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அட்டனன்ஸ் இல் இருந்து முழுமையாக விதிவிலக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாப்பிள்ளையூரணியில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து கோரிக்கை விளக்கி பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர் மதுரம் பிரைட்டன், மாவட்ட துணை தலைவர் நவநீத கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேசி.முருகன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் திருமலை, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி வட்ட செயலாளர் தவமணி பீட்டர், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். நிறைவாக பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் மதிவாணன் நன்றியுரை ஆற்றினார்.