தூத்துக்குடி: மாணவர்களுக்கு பெருமை சேர்த்த மதர் தெரசா பொறியியல் கல்லூரி – 120க்கும் மேற்பட்டோர் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி: மாணவர்களுக்கு பெருமை சேர்த்த மதர் தெரசா பொறியியல் கல்லூரி – 120க்கும் மேற்பட்டோர் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் சுமார் 120 மாணவ, மாணவிகள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்த கல்லூரி உலகளவில் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் 313வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கிராமப்புற மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வேலைவாய்ப்பு பெறும் வகையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 100% வேலைவாய்ப்பு இலக்கை அடையும் நோக்கில் மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஐ வேவ், ஜோஹோ (Zoho), விப்ரோ இன்பிராஸ்ட்ரக்சர், டாட்டா எலக்ட்ரானிக்ஸ், சிம்சன் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் கிளிட்டஸ் பாபு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை பாராட்டினர்.

பணி நியமன ஆணைகளை பெற்ற மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் போதே வேலைவாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய கல்லூரி தலைவர் கிளிட்டஸ் பாபு, “மாணவர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க கல்லூரி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது” என தெரிவித்தார்.