தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் நாளை முதல் மூடப்படும் : தெற்கு ரயில்வே
தூத்துக்குடி நான்காம் ரயில்வே கேட் நாளை முதல் மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை முதல் தூத்துக்குடி வரைவிலான இரட்டை வழி பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி நான்காம் ரயில்வே கேட் நாளை முதல் மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை முதல் தூத்துக்குடி வரைவிலான இரட்டை வழி பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மீளவிட்டான் வரை இரட்டை வழி பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை இரட்டை வழி பாதை அமைப்பதற்காக தண்டவாளங்கள் பொருத்து பணி, நடைமேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு முன்னர் இரண்டாம் கேட் அருகே உள்ள மேலூர் ரயில் நிலையம் திரும்ப பெறப்பட்டு மேலூர் ரயில் நிறுத்தமானது புதிய பேருந்து நிலையம் அருகே கொண்டு வரப்பட்டுள்ளது.
இரட்டை வழி பாதைக்காக ரயில் தண்டவாளம் பொருத்தும் பணிகளுக்காக புதிய பேருந்து நிலையம் மற்றும் சின்னக்கண்னுபுரம் இடையே உள்ள நான்காவது ரயில்வே கேட் நாளை இரவு 10 மணி முதல் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை மூன்று நாட்கள் மூடப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே முதுநிலை மேலாளர் (சிவில்)தங்கவேலு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.