தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரயில்கள் நின்று செல்லாது: தெற்கு ரயில்வே!
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் வருகிற ஏப்.30 ம் தேதி வரை ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் வருகிற ஏப்.30 ம் தேதி வரை ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் புதிய பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரயில்கள் நின்று செல்லும் வகையில், மேலூர் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலூர் ரயில் நிலையத்தில் ஏப்.30 ம் தேதி வரை ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில், திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் அடுத்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட இயக்க மேலாளர் ஜோசப் மேத்யூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.