“விஜய் அரசியலுக்கு ‘கால்ஷீட்’ கொடுக்கும் தலைவர்” – கோவில்பட்டியில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்

“விஜய் அரசியலுக்கு ‘கால்ஷீட்’ கொடுக்கும் தலைவர்” – கோவில்பட்டியில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்

கோவில்பட்டி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கோவில்பட்டி ஒன்றியம் இனாமணியாச்சி கிளை சார்பில் தோழர் ஜவகர் நினைவுத் திடலில் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பேராசிரியர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கு. ரவீந்திரன், சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, மணி, ஜோதிபாசு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னதம்பி, கணேசன், ராமசுப்பு, விஜயராஜ், முத்துசாமி, முத்துராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜானகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை செயலாளர் அழகுசுப்பு நன்றி கூறினார்.

???? மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு:

மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியின் கொள்கைகள் குறித்து இன்னும் தெளிவு இல்லை என்றும், அவரது அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிக்கலாம்; ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது தவறு என்றும் கூறினார். நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்தை சிபிஎம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “சினிமாவிற்கு கால்ஷீட் கொடுப்பது போல அரசியலுக்கும் கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் தான்” என்று கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்போம் என கூறுவதும், பாஜக முதன்முறையாக ஆட்சிக்கு வருவோம் என பேசுவதும் அரசியல் முரண்பாடாக உள்ளதாக விமர்சித்தார். “ஒருவேளை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாலும், அது அதிமுக ஆட்சி அல்ல; மறைமுகமாக பாஜக ஆட்சியாகவே இருக்கும்” என தெரிவித்தார்.