விளாத்திகுளம்: வேம்பார் அருகே பேக்கரிக்கு சீல்... உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை!
வேம்பாரில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிய பேக்கரி மூடி சீலிடப்பட்டது, உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ச.மாரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.