நாசரேத் அருகே பெண் கீழே தள்ளி கொலை: எலக்ட்ரீசியன் கைது!!

நாசரேத் அருகே பெண் கீழே தள்ளி கொலை: எலக்ட்ரீசியன் கைது!!

நாசரேத் அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை செய்ததாக எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிள்ளையனமனை மேலத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி சுகுணா (55). இவர் வீட்டில் உள்ள மின்விசிறி பழுதாகி உள்ளது. இதனால் சகுணா, பழுது நீக்க கடந்த 13ஆம்தேதி அதே ஊரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆசீர்வாதம் (65) என்பவரை அழைத்து பழுது நீக்க கூறியுள்ளார். அதன்படி மின்விசிறியை பார்த்த அவர் பழைய மின் விசிறி என்பதால் பழுது பார்பது கடினம் என தெரிவித்து மறுத்துள்ளார். 

இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆசீர்வாசம். சுகுணா பிடித்து கீழே தள்ளினாராம். இதில் காயமடைந்த அவர் நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் நாசரேத் காவல் ஆய்வாளர் ஜீன்குமார், கொலை வழக்காக வழக்குபதிந்து ஆசீர்வாதத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.