வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பில் உறுதி மொழி ஏற்பு!!

வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பில் உறுதி மொழி ஏற்பு!!

தூத்துக்குடியில் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பில் சங்க கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கு.வினைதீர்த்தான் தலைமையில் கொடி ஏற்று வைத்தார். மாவட்ட செயலாளர் பா.கோபால் வரவேற்று பேசினார். நிர்வாகி ஆனந்த ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் செந்திவேல் நன்றி கூறினார்.