பைக் வாங்கித் தர மறுத்ததால் உயிரிழந்த வாலிபர்! கழுகுமலையில் அதிர்ச்சி சம்பவம்!

பைக் வாங்கித் தர மறுத்ததால் உயிரிழந்த வாலிபர்! கழுகுமலையில் அதிர்ச்சி சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பைக் வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த லட்சுமணக்குமார் (25), கூலித்தொழிலாளி. சமீப காலமாக வேலைக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருந்து வந்த அவர், புதிய பைக் வாங்கித் தருமாறு பெற்றோரிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு இதுகுறித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த லட்சுமணக்குமார், இரவு சுமார் 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கழுகுமலை போலீசார், உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

???? இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.