தருவைகுளத்தில் 150 கோடி தூண்டில் வளைவு துறைமுகம்: தருவைகுளம் மீனவர்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து நன்றி”

தருவைகுளத்தில் 150 கோடி தூண்டில் வளைவு துறைமுகம்: தருவைகுளம் மீனவர்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து நன்றி”

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் பகுதியில், மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு ₹150 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தருவைகுளம் மீனவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பை ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிட்டன், வடக்கு ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் சுதன்ராஜ், பங்குதந்தை வின்சன் அடிகளார், ஊர் கட்டளை காரர் மகாராஜன், யோகராஜ், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லூர்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விசைப்படகு சங்க நிர்வாகிகள் பன்னீர் சச்சிஸ், பாலன், புஷ்பராஜ், கண்ணன் ராஜ், நாட்டுப்படகு சங்க தலைவர் மாணிக்கம், கிளை செயலாளர் மிக்கேல் பாஸ்கர், பிரஸ்நேவ், ஒன்றிய வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து நன்றியை தெரிவித்தனர்.

அப்பகுதி நிர்வாகிகள் கூறுகையில்,

“திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா மூலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தோம். தற்போது அந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதற்காக அமைச்சருக்கும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அவர்களுக்கும் எங்கள் ஊர் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றனர்.

இந்த நிகழ்வில் அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.