தூத்துக்குடியில் பரபரப்பு...தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல இரு அணிகள் மோதல் - பாதிரியார் சிறைபிடிப்பு: போலீஸ் குவிப்பு!!
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் தச்சர் தெருவில் தூய பரி பேதுரு ஆலயத்தில் ஒரு பிரிவினர் கூட்டம் நடத்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலய வளாகத்தில் இரு தரப்பினர் மோதல்,
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் தச்சர் தெருவில் தூய பரி பேதுரு ஆலயத்தில் ஒரு பிரிவினர் கூட்டம் நடத்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலய வளாகத்தில் இரு தரப்பினர் மோதல், வாக்குவாதம் பாதிரியார் செல்வின் துரைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சிறை பிடித்தனர். இதனால் ஆலய வளாகத்தில் தூத்துக்குடி வடபாக காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் லே செயலாளர் கிப்சன் தரப்பினர் ஒரு பிரிவாகவும் எஸ் டி கே ராஜன் பிரிவினர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட தச்சர் தெருவில் அமைந்துள்ள பரிபேதுரு ஆலயத்தில் வைத்து பாதிரியார் செல்வின் துரை தலைமையில் தூத்துக்குடி நாசரே திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் எஸ் டி கே ராஜன், தேவராஜ் ,கோயில் பிச்சை, ரூபன் வேதா சிங் உள்ளிட்ட நான்கு பேருக்கு எவ்வித தகவலும் அளிக்காமல் அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கும் வகையில் இன்று மாலை கூட்டம் நடத்த இருந்ததாக கூறப்படுகிறது,
இதை ஆடுத்து ஆலய வலாகத்தில் திரண்ட எஸ் டி கே ராஜன் தரப்பினர் பாதிரியார் செல்வின் துரைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் கூட்டம் நடத்தக்கூடாது என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது, மேலும் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்ல முயன்ற பாதிரியார் செல்வின் துரையை வெளியே செல்ல விடாமல் எஸ் டி கே ராஜன் அணியினர் சிறை பிடித்தனர் அப்போது இரு தரப்பினர்களிடையே காவல்துறை முன்னிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இனைய... இங்கே தொடவும்(CLICK HERE )
ஏற்கனவே பாதிரியார் செல்வின் துரை பாலியல் புகார் காரணமாக முன்னாள் லே செயலாளர் எஸ் டி கே ராஜனாள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர் தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இதை அடுத்து காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆலய வளாகத்திலேயே இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடியோவை கான...