தூத்துக்குடி பொது தொழிலாளர் சங்கத்தின் 8-வது ஆண்டு பேரவை: புதிய நிர்வாகிகள் தேர்வு – தொழிலாளர்களின் நலனுக்காக முக்கிய தீர்மானங்கள்

தூத்துக்குடி பொது தொழிலாளர் சங்கத்தின் 8-வது ஆண்டு பேரவை: புதிய நிர்வாகிகள் தேர்வு – தொழிலாளர்களின் நலனுக்காக முக்கிய தீர்மானங்கள்

தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் 8-வது ஆண்டு பேரவைக் கூட்டம் கடந்த ஜூன் 26-ஆம் தேதி காலை, தூத்துக்குடியில் உள்ள சிஐடியு (CITU) மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் A. ரவிதாகூர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட நிர்வாகி P. கந்தசாமி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட நிர்வாகி S. தஸ்லீஸ் வரவேற்புரையாற்றினார். தா. முனிஸ்வரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

பேரவைக் கூட்டத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. பேச்சிமுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பி. பெருமாள் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் பி. சுப்புலட்சுமி வரவு–செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

நிறைவு நிகழ்ச்சியில் சிஐடியு மாநில துணைத் தலைவர் R. ரசல் சிறப்புரையாற்றினார். உப்பு தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. மணவாளன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக மாவட்ட நிர்வாகி J. பெஸ்டி நன்றியுரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள்

பேரவையில் அடுத்தகட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டத் தலைவர்: பி. பெருமாள்

மாவட்டச் செயலாளர்: இரா. பேச்சிமுத்து

மாவட்டப் பொருளாளர்: பி. சுப்புலட்சுமி

மாவட்ட துணைத் தலைவர்கள்: அந்தேரியாஸ், பி. பாலு, பி. தங்கராஜ், கந்தசாமி, பெஸ்டி, ஆக்னஸ் ராமலிங்கம்.

துணைச் செயலாளர்கள்: தஸ்லீஸ், முனிஸ்வரன், செல்வவள்ளி, ராமச்சந்திரன், ஸ்டெல்லா.

முக்கிய தீர்மானங்கள்

பேரவையில் உடல் உழைப்பு தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
  • ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
  • நல வாரியம் மூலம் இலவச வீடு, வீடு கட்டும் நிதி மற்றும் திருமண உதவித் தொகையை ₹20,000 ஆக உயர்த்த வேண்டும்.
  • விபத்து மரண நிவாரணமாக ₹5 லட்சம், இயற்கை மரண நிவாரணமாக ₹2 லட்சம் வழங்க வேண்டும்.
  • கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கு இணையான அனைத்து நலன்களும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
  • தீபாவளி போனஸாக ₹5,000 வழங்க வேண்டும்.
  • மாத ஓய்வூதியத்தை ₹5,000 ஆக உயர்த்த வேண்டும்.
  • பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  • குடும்ப ஓய்வூதியமாக ₹2,500 வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.