நாகலாபுரம் அரசு கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்!
நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிரேஷா ஜேக்கப் தலைமை வகித்து போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசினார். நாகலாபுரம் சிறப்பு எஸ்ஐ கண்ணன் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு அடிமை ஆதலால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் போதை பொருள் பயன்படுத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர் லீலா, பொருளாதார துறை பேராசிரியர் சுரேஷ்பாண்டி,ஆங்கிலத் துணைத் தலைவர் வினோத்குமார், மாணவர் பிரதிநிதிகள் கோகிலா,மகாராஜன் உட்பட ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குநர் ஆல்டிரின் செய்திருந்தார்.