கோவில்பட்டியில் தமிழ்நாடு பெண்கள் ஹாக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

கோவில்பட்டியில் தமிழ்நாடு பெண்கள் ஹாக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

கோவில்பட்டியில் தமிழ்நாடு பெண்கள் ஹாக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

கர்நாடகாவில் நடைபெறும் தேசிய சீனியர் பெண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு கோவில்பட்டியில் வைத்து நடைபெற்றது.

தேசிய சீனியர் பெண்கள் ஹாக்கி போட்டி கர்நாடகா மாநிலம் காக்கிநாடாவில் பிப்.13-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நேற்று கோவில்பட்டி அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த 146 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு ஹாக்கி கழக முதுநிலை துணை தலைவர் எம்.வி.சங்கிலிகாளை, திருச்சி ஹாக்கி கழக செயலாளர் வி.சுப்பிரமணியன், பயிற்சியாளர் எஸ்.ரஸ்னா, செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தரவள்ளி, தூத்துக்குடி செயலாளர் சி.குருசித்ர சண்முகபாரதி ஆகியோர் தேர்வர்களாக செயல்பட்டனர். 

இதில், 25 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு பெண்கள் ஹாக்கி அணிக்கு 18 பேர் தேர்வு செய்யப்படுவர் என தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை ஹாக்கி கழக தூத்துக்குடி நிர்வாகிகள் டி.காளிமுத்துபாண்டிராஜா, என்.சந்தன ராஜ், ஏ.ஜெய்கணேஷ், எஸ்.சுரேந்திரன், கே.வேல்முருகன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

+++++++++++++++++++++++++++++++

தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Whatsapp GroupClick Here...