தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

தூத்துக்குடி  கிழக்கு கடற்கரை சாலையில்  மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன்  உயிரிழப்பு!

தூத்துக்குடி  கிழக்கு கடற்கரை சாலையில்  மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன்  உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் கோபி தர்ஷன் வயது ஏழு.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அன்று தூத்துக்குடி இல் இருந்து விளாத்திகுளம் அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுவன் கோபி தனது தந்தை குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் தருவைகுளம் அருகே பட்டினமருதூர் அருகே செல்லும்போது சாலையில்  மாடு குறுக்கே வந்ததில் மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் கோபி மற்றும் அவரது தந்தை குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கோபி மற்றும் அவரது தந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் மூளை சாவு அடைந்த சிறுவன் கோபி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி மாடு குறுக்கே வந்ததில்  நடுநாலு மூளை கிணறை சேர்ந்த ஆசிரியர் சதீஸ் பலியாகி இருந்த நிலையில், தற்போது ஏழு வயது சிறுவன் கோபி பழியாகி  இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

இதை அடுத்தாவது மாவட்ட நிர்வாகம் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.