வீட்டில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல்: அறிவோம் லேபிள்!
வீட்டில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல்: அறிவோம் லேபிள்!
பேக்கரிக்கோ அல்லது இனிப்பகத்திற்கோ (sweet stall) சென்று இனிப்புகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் வாங்கும் பழக்கம் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றது. அவ்விடங்களில் சில லேபிள் விபரங்களை உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். நுகர்வோர்களாகிய நாம், அவற்றை கவனிக்க வேண்டியுது அதைவிட மிகவும் அவசியம். அவை உங்களின் பார்வைக்கு…
- பலகாரம் எந்த எண்ணெயில் செய்யப்பட்டது என்ற விபரம்
- பலகாரம் எந்த நெய்யில் செய்யப்பட்டது என்ற விபரம்
- விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பலகாரங்களின் முன்பு ஒரு சிறிய அட்டை/ப்ளாஸ்டிக் போர்டில் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம்.
- ஸ்வீட்ஸ், காரம் மற்றும் பேக்கரி வகைகளை எடை போட்டு பொட்டலமிடப்படும் போது, அப்பொட்டலத்தில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை அழியாத மையில் எழுத வேண்டியது மிகவும் அவசியம்
- நியூஸ் பேப்பர் உள்ளிட்ட எந்தவித அச்சிட்ட காகிதங்களிலும் உணவுப் பொருள் நேரடியாகப்படுமாறு பொட்டலமிடக்கூடாது.
- அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பைகளை உணவுப் பொருட்களைப் பொட்டலமிடப் பயன்படுத்தக்கூடாது. அதிலும் குறிப்பாக, சாம்பார், ரசம், டீ, காஃபி உள்ளிட்ட எந்த வகை சூடான பொருட்களையும் ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிட்டு வாங்கக்கூடாது.
நாளை முதல் உணவுப் பொருட்களை இருப்பு வைத்தல், தயாரிப்பு மற்றும் அப்புறப்படுத்துதலில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தான தகவல் பகிரப்படும்..!
நன்றி: டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்., நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை, தூத்துக்குடி மாவட்டம். For complaints: 9444042322