பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி!

கடம்பூர் அருகே பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள தென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் மாடசாமி (29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை தனது பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கடம்பூர் - புளியம்பட்டி ரோட்டில் கொண்டிருந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாடசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.