தூத்துக்குடி: பாலியல் வன்கொடுமை & போக்சோ வழக்குகள் – 2 பேர் மீது தடுப்பு காவல் சட்டம்; பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு

தூத்துக்குடி: பாலியல் வன்கொடுமை & போக்சோ வழக்குகள் – 2 பேர் மீது தடுப்பு காவல் சட்டம்; பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (1982) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26) மற்றும் மற்றொரு போக்சோ வழக்கில் தொடர்புடைய இசக்கிமுத்து (45) ஆகிய இருவரின் நடவடிக்கைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி, அவர்களை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சொர்ணராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்களிடம் பரிந்துரை செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் அடிப்படையில், இரு எதிரிகளையும் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.