பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை : போலீஸ் விசாரணை!

பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை : போலீஸ் விசாரணை!

கோவில்பட்டியில் தனியார் பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இனாம் மணியாச்சியைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி மகேஸ்வரி (42). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தம்பதியர் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.