எட்டயபுரம் அருகே லாரி மீது பைக் மோதியதில் வாலிபர் பரிதாப உயிரிழப்பு..!
எட்டயபுரம் அருகே லாரி மீது பைக் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி, சேனையர் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அஜித் (27), இவர் எட்டயபுரத்தில் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பைக்கில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - மதுரை ரோட்டில் தாப்பாத்தி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது நாமக்கல்லில் இருந்து குளிர்பான பாட்டில்களை ஏற்றி வந்த லாரி மீது இவரது பைக் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகிலுள்ள ஏலூர்பட்டி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கிரிதரன் (25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.