விளாத்திகுளம் பகுதியில் விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்கலாம்: ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்!

விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள அரசு கிட்டங்கியில் விவசாய விளைபொருட்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயனடையலாம். என‌ விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் பகுதியில் விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்கலாம்: ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்!

விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள அரசு கிட்டங்கியில் விவசாய விளைபொருட்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயனடையலாம். என‌ விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் :

கிட்டங்கிகள் தயார் விளாத்திகுளம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மிளகாய், உளுந்து, கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசி, மல்லி போன்றவை அதிகமாக பயிரிடப்படுகிறது. விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நவீன முறையில் கட்டப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் 1,800 மெட்ரிக் டன் அரசு கிட்டங்கிகள் மற்றும் விளைபொருட்களை உலர்த்துதற்கு உலர் கலன்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிட்டங்கிகள் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து நல்ல விலைக்கு விற்று பயனடைந்தனர். மேலும் ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய 100 மெட்ரிக் டன் குளிர்பதன கிட்டங்கி விவசாய அமைப்பினால் வாடகைக்கு எடுக்கப்பட்டு வத்தல், ஏலக்காய், நிலக்கடலை போன்றவை இருப்பு வைத்து பயன்படுத்தி வருகின்றனர். 

எனவே, நடப்பு ஆண்டில் விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை கூடத்தின் மூலம் நியாயமான விலையில் விற்று பயனடையலாம். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத பட்சத்தில் காப்பீடு வசதியுடன் கூடிய கிட்டங்கிகளில் குறைந்த வாடகைக்கு இருப்பு வைத்துக் கொள்ளலாம். வாடகைக்கு இருப்பு வைக்கும் பட்சத்தில் அதிகமாக 180 நாட்கள் விளைபொருட்களை சேமித்து வைக்க இயலும். இதில் முதல் 15 நாட்களுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. மீதமுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவிண்டாலுக்கு பத்து பைசா வீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்படுகிறது. 

விளைபொருட்களை கிட்டங்கியில் இருப்பு வைக்கும் நிலையில் விவசாயிகள் அவசர தேவைகளுக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.3 லட்சம் வீதம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த வட்டியாக 5 சதவீதத்தில் கடன் வழங்கப்படுகிறது, என அவர் தெரிவித்துள்ளார்.

Also Read... தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை : குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை..!