தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மனவளர்ச்சி குன்றியவர் என சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்: ஆட்சியரிடம் பெண் பரபரப்பு புகார்!
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மனவளர்ச்சி குன்றியவர் என சான்றிதழை தவறாக வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மனவளர்ச்சி குன்றியவர் என சான்றிதழை தவறாக வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி ஆரோக்கியபுரம், இராஜபாளையம், பகுதியைச் சேர்ந்த பிலவேந்திரன் என்பவரது மகள் மரியசுதா (30) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் "எனக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். நான் பிஏ தமிழ் படித்துள்ளேன். நான் முதிர்கன்னி என்பதால் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதிவு செய்தேன்.
அப்போது தவறுதலாக மனவளர்ச்சி குன்றியவர் எனக் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கியுள்ளனர். இதனை மாற்றித் தர வலியுறுத்தி கடந்த 2 ஆண்டு காலமாக அரசு மருத்துவமனைக்கு அலைந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை மாற்றித் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.