கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கிப் போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி!
அகில இந்திய ஹாக்கிப் போட்டி 4ஆம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி நியூ டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
அகில இந்திய ஹாக்கிப் போட்டி 4ஆம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி நியூ டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை கான 12 -வது அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நான்காம் நாளான நேற்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் சென்னை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 3:2 என்ற கோல் கணக்கில் சென்னை, தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிப் பெற்றது.
12 வது லீக் ஆட்டத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, நியூ டெல்லி மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகள் மோதின இதில் 3:2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி அணி வெற்றிப் பெற்றது. 6-வது நிமிடத்தில் சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணி வீரர் தமிழரசன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
10-வது நிமிடத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, நியூ டெல்லி அணி வீரர் சுனில் யாதவ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 13-வது நிமிடத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, நியூ டெல்லி அணி வீரர் சுனில் யாதவ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
37-வது நிமிடத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, நியூ டெல்லி அணி வீரர் தல்விந்தர் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 51-வது நிமிடத்தில் சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை வீரர் ஜோஸுவா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். சுப்பையா தாஸ் மற்றும் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
சிறந்த ஆட்டக்காரர்: வினித் ராஜா, சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணி