பிப்.9 ல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

பிப்.9 ல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

பிப்.9 ல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

பிப்.9 ல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 120 கிராம பஞ்சாயத்துக்களில் 2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இக்கிராமங்களில் 09.02.2023 வியாழக்கிழமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் பயனடையும் பொருட்டு, பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகள் ஒருங்கிணைந்து, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில் குளத்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், விவசாயத்தில் தற்போதுள்ள தொழில் நுட்பங்கள் குறித்து விளக்குதல், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், பயிர் கடன் வழங்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு குறித்து விளக்குதல், கால்நடைகள் நலம் பேண சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களில், பயனாளிகள் தேர்வு செய்தல் என பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கிராம விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்ரூபவ் இ.ஆ.ப.ரூபவ் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

120 கிராமப் பஞ்சாயத்துக்கள் விவரம்

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் நாலுமாவடி, புறையூர், கருவேலம்பாடு, உடையார்குளம், மளவராயநத்தம், அழகப்பாபுரம், குரங்கனி, புன்னக்காயல், கருங்குளம் வட்டாரத்தில், வடவல்லநாடு, செக்காரக்குடி, முரப்பநாடு புதுக்கிராமம், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, ராமானுஜம்புதூர், விட்டிலாபுரம் கோவில்பத்து, தாதன்குளம், ஆழிகுடி,  கயத்தாறு வட்டாரத்தில், கே.சுப்பிரமணியபுரம், குப்பணாபுரம், கே.சிவஞானபுரம், தெற்குவண்டானம், திருமலாபுரம், வடக்கு இலந்தைகுளம், கே.வெங்கடேஸ்வரபுரம், பன்னீர்குளம், கே.சிதம்பராபுரம், சிதம்பராபுரம், முடுக்கலான்குளம், சோழபுரம், உசிலங்குளம், வடக்கு வண்டானம்,

கோவில்பட்டி வட்டாரத்தில், பாண்டவர்மங்கலம், இளம்புவனம், சின்னமலைக்குன்று, கொடுக்காம்பாறை, சிதம்பராபுரம், சிந்தலக்கரை, குலசேகரபுரம், கடலையூர், துறையூர், மூப்பன்பட்டி, தீத்தாம்பட்டி, சத்திரப்பட்டி, ஆர்.வெங்கடேஸ்வரபுரம், வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, ஜமீன்தேவர்குளம், சித்திரம்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில், சில்லாங்குளம், பாஞ்சாலங்குறிச்சி, பசுவந்தனை, கீழமங்கலம், வேடநத்தம், வெள்ளாரம், நாகம்பட்டி, கொல்லங்கிணறு, கொடியங்குளம், கே.தலைவாய்புரம், மலைப்பட்டி, புதூர் பாண்டியாபுரம், கொல்லம்பரும்பு, கொத்தாளி, முறம்பன், குமரெட்டியாபுரம், சங்கம்பட்டி, பாறைக்குட்டம்,

புதூர் வட்டாரத்தில், வெம்பூர், முத்துலாபுரம், சிவலார்பட்டி, கீழக்கரந்தை, பட்டிதேவன்பட்டி, லட்சுமிபுரம், வீரப்பட்டி, காடல்குடி, மாசார்பட்டி, முத்தையாபுரம், சாத்தான்குளம் வட்டாரத்தில், சாஸ்தாவிநல்லூர், புதுக்குளம், கோமநேரி, பிடாநேரி, பழங்குளம், பெரியதாழை, நெடுங்குளம், திருவைகுண்டம் வட்டாரத்தில், ஸ்ரீமூலக்கரை, சிறுதொண்டநல்லூர், சூளைவாய்க்கால், வெ.ஆதிச்சநல்லூர், பேரூர், மஞ்சள்நீர்காயல், உமரிக்காடு, அகரம்,

தூத்துக்குடி வட்டாரத்தில், குமாரகிரி, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, தளவாய்புரம்,  கீழத்தட்டப்பாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, திருச்செந்தூர் வட்டாரத்தில், பள்ளிப்பத்து, மூலக்கரை, பிச்சிவிளை, வீரமாணிக்கம், உடன்குடி வட்டாரத்தில், வெங்கட்ராமானுஜபுரம், மணப்பாடு, ஆதியாக்குறிச்சி, சீர்காட்சி, சிறுநாடார்குடியிருப்பு, விளாத்திகுளம் வட்டாரத்தில், வேம்பார்தெற்கு, வைப்பார், வேம்பார், கீழவைப்பார், வில்வமரத்துப்பட்டி, வேலிடுபட்டி, ஜமீன்கரிசல்குளம், கே.சுந்தரேஸ்வரபுரம், நீராவிபுதுப்பட்டி, மார்த்தாண்டம்பட்டி, எம்.குமாரசக்கனாபுரம், இராமனூத்து, வீரபாண்டியபுரம், பி.மீனாட்சிபுரம்  ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறவுள்ளது.