முறப்பநாடு கிராம் நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் நியமனம்!

முறப்பநாடு கிராம் நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் நியமனம்!

முறப்பநாடு கிராம் நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் நியமனம்!

தூத்துக்குடி முறப்ப நாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி சுரேஸ் என்பவரை நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஷ்ரா கார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வந்தார் இவர் அந்த பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்ததன் காரணமாக கடந்த 26-ம் தேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தே இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

 இந்த கொலை தொடர்பாக ராமசுப்பு,மாரிமுத்து ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் முறப்பநாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜமால் மற்றும் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் காவலர் மகாலிங்கம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு இயக்கம் செயலாளர் அய்கோ என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-யிடம் நேற்று முன் தினம் மனு அளித்தனர் இந்த நிலையில் தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி சுரேஸ் என்பவரை நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஷ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.