தூத்துக்குடியில் தவெக பேனர் கிழிப்பு... அஜிதா ஆக்னல் சகோதரர் கைது...!

தூத்துக்குடியில் தவெக பேனர் கிழிப்பு... அஜிதா ஆக்னல் சகோதரர் கைது...!

தூத்துக்குடியில் த.வெ.க., வாழ்த்துப் பேனரை கிழித்ததாக புகாரின் பேரில் திமுக பிரமுகர் அஜிதா ஆக்னலின் அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். 

இந்த நிலையில், தூத்துக்குடி விஇ ரோட்டில் அந்தோணியார் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை காரில் வந்த சிலர் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி மட்டக்கடை தட்டார் தெருவைச் சேர்ந்த ஜேசு மகன் சுமன் (45) என்பவரை கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக மேலும் மூவரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சுமன் திமுக பிரமுகர், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இவர் பில்லா ஜெகனின் தம்பி மற்றும் தவெக முன்னாள் நிர்வாகி அஜிதா ஆக்னலின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.