சாயர்புரம் போப் கல்லூரியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்..!
 
                                ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் - போப் கல்லூரியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது
ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி கழிவு பொருள் சேகரி போர் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது நிலைத்த கழிவு மேலாண்மை முயற்சிகளின் கீழ் சாயர்புரம் போப் கல்லூரியின் முதல்வர் டாக்டர் H.ஜான்சன் ஜெயகுமார் அவர்களின் அனுமதியுடன் டாக்டர் K. முத்தரசன் நெகிழி இல்லா இந்தியா இந்த விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் உதவி பேராசிரியர் திரு.தினகரன் பொருளாதார துறை தலைவர் , உதவி பேராசிரியர் திருமதி.ஜீவ ராணி தங்கம் இயற்பியல் துறை , பேராசிரியர் திரு.மனுநீதி ஆங்கில துறை தலைவர், பேராசிரியர் திருமதி.A.வசந்தி தமிழ்த்துறை , திருமதி D ஜெயா மாவட்ட திட்ட அலுவலர் ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா - இந்நிகழ்ச்சியில் கருத்தாளரக கலந்து கொண்டு க்யூ ஆர் குறியீடு அடிப்படையிலான வினாடி வினா பலகை அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டின் பொறுப்புணர்வை உருவாக்கும் நோக்கில் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டன. மேலும்பிளாஸ்டிக் விழ்ப்புணர்வு அடிப்படையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது உதவி பேராசிரியர் திரு.ஸ்டான்லி டேவிட் பிச்சை வணிகத்துறை , உதவி பேராசிரியர் திருமதி டாக்டர் விஜயா வேதியியல் துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டார்கள் .
சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த முகாமில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆண்டின் ஹேண்ட் இந்தியாவின் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி ஜெயா அவர்கள் செய்திருந்தார்
 
                         
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
