காயல்பட்டினம் கடற்கரையில் தொண்டு நிறுவனம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி..!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் உலக துப்புரவு தினத்தை முன்னிட்டு 'தூய்மையே சேவை' என்ற அடிப்படையில் காயல்பட்டினம் கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் பிளாஸ்டிக் பை தவிரத்து மஞ்சள்பை விழிப்புனர்வு பிரச்சாரம் மற்றும் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து பூமிக்கு உதவும் "மறுசுழற்சி பாதுகாவலர்"களுக்கான பயிற்சி சுகாதார பொருட்கள் அடங்கிய ஹெல்த் அன்ட் ஹைஜனிக் கிட் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் உலக துப்புரவு தினத்தை முன்னிட்டு தூய்மையே சேவை என்ற அடிப்படையில் காயல்பட்டினம் கடற்கரையை சுத்தம் செய்து 530 கிலோ குப்பைகள் அகற்றபட்டது
இந்நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் உயர்திரு.K.A.S முத்து முகமது அலீம் அவர்கள், நகராட்சி ஆணையாளர் உயர்திரு ச.மகேஷ்வரன் அவர்கள் , நகராட்சி மேலாளர் திரு. ரவி அவர்கள் , நகராட்சி சுகாதார ஆ்வாளர் திரு.S. செல்லபாண்டி அவர்கள் , ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.ஜெயா அவர்கள் மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் , தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் SGH உறுப்பினர்கள் மற்றும் ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியாவின் ஶ்ரீவைகுண்டம் மற்றும் ஆத்தூர் பகுதியை சார்ந்த மறுசுழற்சி பாதுகாவலர்கள், என தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்
மேலும் பொதுமக்களிடையே மஞ்சள் பை விழிப்புணர்வு, குப்பைகளை பொது இடத்தில் கொட்ட மாட்டேன் பிறரையும் கொட்ட அனுமதிக்க மாட்டேன் என பல்வேறு உறுதி மொழி எடுத்து பேரணி நடைபெற்றது பொது மக்களும் பலர் அதில் கலந்து கொண்டனர்
மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு *ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா வின் சார்பாக சுகாதார பொருட்கள் அடங்கிய ஹெல்த் அன்ட் ஹைஜனிக் கிட் நகர்மன்ற தலைவர் K.A.S. முத்து முகம்மது அலீம் அவர்களாலும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் S . செல்லப்பாண்டி அவர்களாலும் வழங்கப்பட்டது*