தூத்துக்குடியில் டிசம்பர் 14ம் தேதி முதல் ரயில் சேவையில் மாற்றம்: மணியாச்சியில் இருந்து இயக்கம்!

தூத்துக்குடியில் டிசம்பர்  14ம் தேதி முதல் ரயில் சேவையில் மாற்றம்: மணியாச்சியில் இருந்து இயக்கம்!

தூத்துக்குடி - மீளவிட்டான் தண்டவாளத்தில் இணைப்புப் பணி காரணமாக தூத்துக்குடியில் வருகிற 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து மீளவிட்டான் ரயில் நிலையம் வரை வருகிற 14ம் தேதி முதல் 23வரை தண்டவாளத்தில் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தூத்துக்குடி திருநெல்வேலி ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலருவி விரைவு ரயில் திருநெல்வேலி வரையிலும், முத்துநகர் விரைவு ரயில் மணியாச்சி வரையிலும், மேட்டுப்பாளையம் ரயில் மணியாச்சி வரையிலும், ஓகா ரயில் கோவில்பட்டி வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.