சட்டமன்றத்தில் வரைவு சட்ட மசோதாவை கண்டித்து தூத்துக்குடியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

சட்டமன்றத்தில் வரைவு சட்ட மசோதாவை கண்டித்து தூத்துக்குடியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

தனியார் பல்கலைக்கழக வரைவு சட்டம் மசோதாவை கண்டித்து தூத்துக்குடியில்  மூட்டா கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் உள்ள  அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றம் செய்திடும் வகையிலான தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தம் 2025 நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் தாக்கல் செய்தார். *மாணவர் மற்றும் ஆசிரியர் நலன்கள், இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியைப் பாதிக்கும் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவினை கண்டித்தும் இதனை திரும்ப பெறக் கோரியும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ உ சிதம்பரம் கல்லூரி,  ஏபிசி மகாலட்சுமி கல்லூரி, சாயர்புரம் போப்ஸ் கல்லூரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்லூரி வாயிற் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.