தூத்துக்குடி என்.டி. பி.எல் அனல் மின் நிலையத்தில் தொழிலாளி மர்ம மரணம் : உறவினர்கள் முற்றுகை போராட்டம்..!
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட அசோக் என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு குடும்பத்திடம் தகவல் தெரிவிக்காமல் பிரேத பரிசோதனை நடைபெற்றதை கண்டித்தும் என்டிபிஎல் நிர்வாகத்தை கண்டித்தும் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் வழங்க கோரி என்டிபிஎல் அனல் மின் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அசோக்கின் குடும்பத்தினர் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகர் நாலாவது தெரு பகுதி சேர்ந்தவர் அசோக் இவர் தூத்துக்குடியில் உள்ள என் டி பி எல் அணல்மின் நிலையத்தில் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் உள்ளே உள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார் அப்போது திடீரென விஷ வாயு வெளியேறியதில் மயக்கம் அடைந்த அசோக் அங்கேயே கீழே விழுந்துள்ளார்
என் டி பி எல் அனல்மின் நிலையத்தில் முதலுதவி அளிக்க மருத்துவ குழு இல்லாததால் மயக்கம் அடைந்த அசோக்கை துறைமுக ஆனைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அசோக் பரிதாபமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார்
இதைத்தொடர்ந்து அசோக்கின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது
இந்நிலையில் அசோக் குடும்பத்திற்கு அசோக்கின் மரணம் குறித்து முறையாக தகவல் தெரிவிக்காத என் டி பி எல் நிர்வாகம் அசோக்கின் குடும்பத்தினர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் இருக்கும் போது அவரது உடலை குடும்பத்தினருக்கு தெரியாமல் காவல்துறை மூலம் பிரேத பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது
இதைத் தொடர்ந்து விஷவாயு தாக்கி இறந்த அசோக்கின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் குடும்பத்திற்கு தெரியாமல் என்டிபிஎல் நிர்வாகம் சார்பில் அசோக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை கண்டித்து என் டி பி எல் அனல் மின் நிலையம் முன்புசி ஐ டி யு, ஆதி தமிழர் பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அசோக்கின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.