வீட்டில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல்: உப்பு!

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...

வீட்டில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல்: உப்பு!

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...

இன்றைய தலைப்பு: உப்பு

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி யாவரும் அறிந்ததே. ஆனால், அந்த உப்பினை அதிகமாக எடுத்துக்கொண்டலோ அல்லது குறைவாக எடுத்துக்கொண்டாலோ உடல் நலத்திற்கு பிரச்சினையைக் கொடுக்கும். மேலும், தைராயடு ஹார்மோன் குறைபாட்டு நோய்களைக் கட்டுப்படுத்திட உப்பில் அயோடின் என்ற நுண்ணூட்டச்சத்தினை செறிவூட்டி மனித நுகர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. அயோடின் எளிதில் காற்றில் கலந்துவிடும் தன்மை உடையது. எனவே, நுகர்வோர்களாகிய நாம், கீழே குறிப்பிட்டுள்ளவைகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

  •  உப்பை வாங்கிவந்தவுடன், அந்த உப்பில் அயோடின் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, உருளைக் கிழங்கை இரண்டாக நறுக்கி, அதன் மாவுப் பகுதியில் சிறிதளவு உப்பைத் தடவி, இரண்டு சொட்டு எழுமிச்சைச்சாற்றைவிட்டு, இரண்டு நிமிடங்கள் வரை காத்திருந்தால், உருளையின் மாவுப் பகுதி ஊதா நிறத்தில் மாறும். அவ்வாறு மாறவில்லை எனில், அந்த உப்பில் அயோடின் இல்லை அல்லது மிகக் குறைவாக உள்ளது என்று பொருள். எனவே, அந்த உப்பை வாங்கிய கடையில் திருப்பித் தந்திடவும். அயோடின் டெஸ்ட் கிட்டும் ரூ.50-ற்கு கிடைக்கின்றது.
  • உப்பை பாக்கெட்டில் இருந்து, ஒரு காற்றுப்புகாத கண்ணாடி/பீங்கான்/ப்ளாஸ்டிக் ஜாடியில் மாற்றி, இருக்கமாக மூடிவைக்க வேண்டும். உப்பைத் திறந்து வைத்தால் அயோடின் குறைந்துவிடும் அல்லது இல்லாமலே போய்விடும்.
  •  ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவிற்கு மிகாமல் தான் உப்பை உணவில் சேர்க்க வேண்டும். இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளவும்.
  •  Low Sodium Salt என்ற உப்பும், FSSAI-ன் அனுமதிபெற்று, மார்க்கெட்டில் கிடைக்கின்றது. அதனை இரத்தக்கொதிப்பினால் பாதிக்கப்பட்டோர் வாங்கிப் பயன்படுத்தலாம்.
  •  இரத்தசோகையினைத் தடுக்க, தற்பொழுது FSSAI-ஆனது “Double Fortified Salt” என்று, உப்பில் அயோடின் மற்றும் இரும்புச் சத்து ஆகிய இரண்டு நுண்ணூட்டச் சத்துக்களையும் செறிவூறிட்டி விற்பனை செய்ய அனுமதித்து, தற்பொழுது அவை சந்தையில் கிடைக்கின்றது. அதனை நீல நிறத்தில் இருக்கும் “+F” என்ற குறியீட்டினைக் கொண்டு கண்டறியலாம்.
  • அயோடின் குறித்தான தவறான தகவல்கள் வாட்ஸ்அப்பில் அவ்வொப்போது பரவுகின்றது. நமது ஒரு நாள் அயோடின் தேவை 150 மைக்ரோகிராம் அளவு மட்டுமேயாகும். அதற்கு ஏற்பவே மார்க்கெட்டில் கிடைக்கும் உப்பில் இருக்க வேண்டிய அயோடின் அளவினை 15ppm என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1100 மைக்ரோகிராம் என்ற அளவில் அயோடின் எடுத்துக்கொண்டாலும், அது சிறுநீர் வழியாகச் சென்றுவிடும். அதனால், அயோடின் நுண்ணூட்டச் சத்தினை அதிகமாக எடுத்துக்கொண்டால் பாதிப்பு ஏற்படும் என்ற தவறான தகவலைப் புறக்கணிப்போம்.

நாளை…..முட்டை என்ற உணவுப் பொருளைப் பாதுகாக்கும் நெறிமுறைகள்  குறித்தான தகவல் பகிரப்படும்..!

நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,

நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,

தூத்துக்குடி மாவட்டம்.

For complaints: 9444042322

எங்களது வாட்ஸ் ஆப் குழுவில் இனைய... 

https://chat.whatsapp.com/LtpR5mHnmdMB2oIpzhmJNx