மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பிரியாத்தி (83/2026) என்பவர் கடந்த 2024ம் ஆண்டு தனது மகனான பாலமுருகன் (38/2024) என்பவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தார். 

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  பிரீத்தா  இன்று (28.01.2026) மேற்படி பிரியாத்தி என்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  நவநீதகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  சேவியர் ஞானபிரகாசம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன்  பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு துரிதமாக விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.