தூத்துக்குடி பிரபல ஜவுளி கடை அருகே உள்ள வெண்டர் மிஷினில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை !!

தூத்துக்குடி பாளைய ரோட்டில் உள்ள பிரபல ஜவுளி கடை முன்பு அமைக்கப்பட்டுள்ள வென்டர் மிஷினில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி பாளை ரோட்டில் பிரபல ஜவுளிக்கடை முன்பு வென்டர் மிஷின் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிஷின் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டு குழந்தைகளுக்கான கேக் வகைகள் பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மிஷினில் வழங்கப்படும் பொருட்கள் உரிய தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, MRP, ஏதும் அச்சிடப்படாமல் இருந்துள்ளது இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்டம் நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
மேலும் பொது மக்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி காலாவதி ஆகும் தேதி எம்ஆர்பி ஆகியவை அச்சிட வேண்டும், இல்லாத பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள படும் என உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.