3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பலன்? – திருவைகுண்டத்தில் இலவச வீட்டு மனை கோரி காத்திருப்பு போராட்டம்; ஒரு வாரத்தில் பயனாளிகள் பட்டியல் வெளியிட அதிகாரிகள் உறுதி!

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பலன்? – திருவைகுண்டத்தில் இலவச வீட்டு மனை கோரி காத்திருப்பு போராட்டம்; ஒரு வாரத்தில் பயனாளிகள் பட்டியல் வெளியிட அதிகாரிகள் உறுதி!

திருவைகுண்டம் பகுதியில் சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு முறையும் வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தும், நடைமுறையில் காலதாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை (06.07.2026) "காத்திருப்பு போராட்டம்" நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவைகுண்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் வீட்டு மனை பெறத் தகுதியான பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து, அதிகாரிகளின் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ராஜா, ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், கருப்பசாமி, விவசாய சங்கத் தலைவர் கணபதி, கருங்குளம் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.