தூத்துக்குடியில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம் – ₹15.90 லட்சம் பணம் பறிமுதல் | பறக்கும் படை அதிரடி!

தூத்துக்குடியில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம் – ₹15.90 லட்சம் பணம் பறிமுதல் | பறக்கும் படை அதிரடி!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 நடைபெற உள்ளது முன்னிட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாளை இன்று காமராஜ் பெண்கள் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கூறியதாவது:

மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. வாகன சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை இன்று காலை நிலவரப்படி:
???? ₹15,90,280 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
???? ₹19,780 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

இந்த பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் தொடர்பான முறைகேடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவற்றுக்கு மேலான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட அரசியல் விளம்பரங்கள் 48 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளன. தனிநபர் சொத்துகளில் உள்ள விளம்பரங்கள் 72 மணி நேரத்திற்குள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

GPS வசதி கொண்ட வாகனங்களுடன் பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட செலவின பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவை குழுவினால் பரிசீலிக்கப்பட்டு உரியவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதுகாப்பு தேவைப்படும் வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.