தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்கல்: கீதாஜீவன் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அதிரடி பேச்சு!

தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்கல்: கீதாஜீவன் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அதிரடி பேச்சு!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு திமுக மாநகர் செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பேசுகையில்,

கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் திறன்மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகத்தில் 49 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். இதில் திருச்செந்தூர் அருகிலுள்ள ஒரு மாணவி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்த பயிற்சி 12ம் வகுப்பு தேர்ச்சி முடிந்ததும் வழங்கப்படுகிறது.

"முதலமைச்சர் தலைமையில் தமிழகமானது இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக வளர்ந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இருந்ததால் தொழில்முனைவோர் அதிகரித்துள்ளனர். தற்போது 42% பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்."

அவர் கடந்த ஆட்சியின் கொரோனா கால தடைகளை நினைவூட்டினார். "அந்த நேரத்தில் இரவு 9.30 மணிக்கு எல்லா கடைகளையும் மூட சொல்கையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். சில சம்பவங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டது. தற்போதைய ஆட்சியில் வணிகர்கள் 24 மணி நேர கடைகள் திறக்க முடிந்ததால் வியாபாரம் சீராக நடைபெற்று வருகிறது," என்று கூறினார்.

முக்கிய திட்டங்கள் மற்றும் பட்டா வழங்கல்:

மகளிர் உரிமைத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது; தோ்தலுக்குப் பிறகு கூடுதல் தொகை வழங்கப்படும்.

‘குலவிளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு மானிய கடன் வழங்கப்படுகிறது.

சூறியொளி மின்சாரம் நடைமுறையில் உள்ளது.

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கும்.

தூத்துக்குடி தொகுதியில் பட்டா வழங்கும் திட்டம்:

பட்டா கேட்டு விண்ணப்பித்த பலருக்கும் கணினி பட்டா வழங்கப்பட்டு விட்டது; விடுபட்டவர்கள் தோ்தலுக்குப் பிறகு பெறுவார்கள். தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பட்டா பெற்றுள்ளனர். கூட்டணி அனைவரையும் வாக்களித்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டியுள்ளது.