அமைச்சர்கள் முதலில், பின்னர் கனிமொழி? காட்டாலங்குளம் விழாவில் பரபரப்பு... காவல்துறையுடன் வாக்குவாதம்!

அமைச்சர்கள் முதலில், பின்னர் கனிமொழி? காட்டாலங்குளம் விழாவில் பரபரப்பு... காவல்துறையுடன் வாக்குவாதம்!

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்.  காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் இன்று நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.யை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றும் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் , காரில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், தவெக அமைச்சர்கள் முதலில் மரியாதை செலுத்திய பிறகே கனிமொழி கருணாநிதி மரியாதை செலுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த சலசலப்புக்குப் பிறகு, திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி , நான் நடந்தே செல்கிறேன் என்று கூறி நடந்து சென்று மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.