கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!
கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல வகை காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மடுட்ம் காய்ச்சல் பாதிப்பால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக
மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு உள்ள அரசு மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் 12,965 பேர் காய்ச்சலுகாக அனுமதிபட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 96 பேருக்கு டெங்குவும், 6 பேருக்கு எலிக்காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஒரே மாதத்தில் 86 பேர் காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில், நேற்று மட்டும் 8 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், 239 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், எலிக்காய்ச்சலுக்கு 2 பேரும், டெங்கு காரணமாக ஒருவரும், வெறிநாய்க்கடி காரணமாக இருவரும், ஒருவர் எச்1என்1 பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.