ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நவ.28இல் பதவியேற்கிறார்!!

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணி 56 தொகுதிகளில் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 34, காங் கிரஸ் - 16, ராஷ்டிரிய ஜனதா தளம் - 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி-2) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி யை கைப்பற்றியது.
பாஜக கூட்டணி வெறும் 24 தொகுதிகளில் (பாஜக - 21, ஐக்கிய ஜனதா தளம் -1, ஜார்க்கண்ட் மாணவர் பேரவை - 1, லோக் ஜனசக்தி - 1) வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. பெரும்பான் மைக்கு தேவையான 42 இடங்களை விட கூடுதலாக 14 இடங்களில் வென்றுள்ள “இந்தியா” கூட்டணி சார்பில், ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வ ராக பொறுப்பேற்க உள்ளார்.
நவம்பர் 28இல் ராஞ்சியில் நடைபெறும் விழா வின் பொழுது ஹேமந்த் சோரன் 4ஆவது முறையாக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் காங்கி ரஸைச் சேர்ந்த 6 பேரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 4 பேரும் இடம்பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரி வால் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி யின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.