இது தேர்தல் இல்லை… தீர்ப்பு... மைக் சின்னத்தில் மின்னல் வேகம் – நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி தலைவர் பொன் குமரன் வாக்குறுதி பட்டியல் வைரல்!

இது தேர்தல் இல்லை… தீர்ப்பு... மைக் சின்னத்தில் மின்னல் வேகம் – நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி தலைவர் பொன் குமரன் வாக்குறுதி பட்டியல் வைரல்!

“நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொன் குமரன், மைக் சின்னத்தில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் வழங்கிய மைக் சின்னத்துடன் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்..

இந்த நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அவர் அறிவித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், இளைஞர் முன்னேற்றம், பெண்கள் நலன் உள்ளிட்ட பல துறைகளில் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளார்..

லஞ்சம், ஊழல்களை ஒழிக்க முழுமையாக பாடுபடுவோம், டாஸ்மாக் நிரந்தரமாக மூடுவோம். கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிப்போம். பொது இடங்களில் மற்றும் சுவர்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள் அனைவற்றையும் நிரந்தரமாக தடை செய்வோம். நமது வீடுகளைப் போல் சுத்தமாக அழகாக வைப்போம்.

அரசியல் கட்சிகள் ஊர்வலங்கள், பொது கூட்டங்களை நிரந்தரமாக தடைசெய்வோம். பொது மக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவோம்.

மாணவர் மாணவிகள் தங்கு தடையின்றி பள்ளி படிப்புகள், கல்லூரி படிப்புகளை முடிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம். பெற்றோர்களின் கவலைகளை போக்குவோம்.

பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்வோம். பெண்களுக்கு எதிரான குற்ற மனுக்கள் மீது மின்னல் வேகத்தில் துரிதமான நடவடிக்கை (24 x 7) எடுக்க செயல்படுவோம்.

இளைஞர்களுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ற, திறமைகேற்ற தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

ஏழை எளியோர்களுக்கு, வசதி வாய்ப்புகள் இல்லாத அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் இலவசமாக முழுமையாக கிடைத்திட வழிவகைகள் செய்வோம்.

கனரக தொழிற்சாலைகள், MSME, சிறுதொழில்கள் பெருக்கிடுவோம். பெண் தொழில் அதிபர்களை அதிகப்படுத்த எல்லா வகையான ஊக்குவித்தல், உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளும் செய்வோம்.

நீதிமன்றங்களில் காலதாமதமாகி தேங்கிக் கிடக்கும் வழக்குகளை காலதாமதமின்றி தீர்வு செய்ய ஆவண நடவடிக்கைகளை செய்வோம். அரசு அலுவலகங்களில் மற்றும் அமைச்சர்களிடமும் கொடுக்கப்படும் பொது மக்களின் மனுக்கள். வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை காலதாமதமின்றி உடனடியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுத்திடச் செய்வோம்.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது தக்க நடவடிக்கைகளை விரைவில் எடுக்கச் செய்வோம். மழை காலங்களில் ஊருக்குள் தண்ணீர் தேங்காத அளவிற்கு முன்னேற்பாடாக வடிகால்வாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் திட்டங்களை துரிதமாக சரியான முறையில் அமல்படுத்த செயல்படுவோம்.

மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில், கடைகளில், தொழிற்சாலைகளில் தேங்கும் நிலையை போக்குவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காண வழிவகைகள் செய்வோம்.

தூத்துக்குடி சாலை நெரிசல்களை போக்கவும், சாலை வசதிகளை தொலைநோக்கு பார்வையில் ஏற்படுத்தவும் திட்டங்களை ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் வேலைகள் செய்யப்படும்.

தூத்துக்குடி கப்பல் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் சர்வதேச அளவிற்கு வசதிகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்படும். அதன் வாயிலாக பன்னாட்டு தொழில்களை நம் நகரில் பெருக்குவோம். 17. உழைக்கும் தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்களை கருத்தாய்வு செய்து உடனடியாக அமல்படுத்த ஏற்பாடுகள் செய்வோம்.

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களில் உள்ள குறைபாடுகளை நீக்குவோம். அவர்களுக்கான எல்லா உதவிகளும் கிடைத்திட செய்வோம்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிவகைகள், திட்டங்களை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் செய்வோம்.

மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) அனைவரின் மனுக்களின் மீது 30 நாட்களுக்கும் தீர்வு செய்ய அனைத்து முயற்சிகளும் எடுப்போம்.

பழங்காலத்து கோவில்களை பாதுகாப்போம். புதுப்பிப்போம். அவைகளை சுற்றுலா ஸ்தலங்களாக மேம்படுத்துவோம். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம் என்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார்..