புதூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு ஓராண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு ஓராண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பெண்கள் உட்பட 10பேர் புதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னறிவிப்புமின்றி சாலை மறியல் செய்தனர். அப்போது விளாத்திகுளத்தில் இருந்து அருப்புகோட்டை செல்லும் பேருந்தை வழிமறித்து வினோத் என்பவர் கல்லால் தாக்கியதில் அரசு பேருந்தின் டிரைவர் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்தது. 

இதுகுறித்து டிரைவர் முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, பஸ் கண்ணாடி உடைத்ததாக புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தயாளன் மகன் வினோத் (37) என்பவருக்கு ஓராண்டு கருங்காவல் சிறை தண்டனையும். ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த வழக்கில் 9 பேரை நீதிபதி விடுதலை செய்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜர் ஆனார்.