2027 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

2027 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை பெற தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் மற்றும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்ம விருதுகள், கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றுபவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்குத் தகுதியான நபர்களின் கருத்துருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளமான

https://awards.tn.gov.in

மூலம் வரும் 31.07.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள்:

1. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும்.

2. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தனிநபர் செய்த சாதனைகள் குறித்து ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துரு தயாரிக்க வேண்டும்.

தமிழ் எழுத்துரு: மருதம்

ஆங்கில எழுத்துரு: Verdana

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

பொருளடக்கம் மற்றும் பக்க எண் (Index)

விண்ணப்பதாரரின் சுயவிவரம் (Bio-data)

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2

சாதனைகள் குறித்த ஒரு பக்க விளக்கக் குறிப்புகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் புத்தக வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 2 பிரதிகள் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர்

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோரம்பள்ளம்,

தூத்துக்குடி – 628101.

விண்ணப்பங்கள் 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.