சாத்தான்குளம் அருகே பரபரப்பு... பிரியாணியில் பூரான் : பொதுமக்கள் அதிர்ச்சி..!
சாத்தான்குளம் கடை ஒன்றில் சாப்பிட்ட பிரியாணியில் பூரான் கிடக்கும் வீடியோ வலை தளங்களில் வைரலாகி வருவது உணவு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாத்தான்குளம் கடை ஒன்றில் சாப்பிட்ட பிரியாணியில் பூரான் கிடக்கும் வீடியோ வலை தளங்களில் வைரலாகி வருவது உணவு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வலைதளங்களில் நேற்று சாத்தான்குளம் கடை பிரியாணியில் பூரான் என வீடியோ ஒன்று அதிக நபர்களால் பதிவிடப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட இலையில் பூரான் கருப்பு கலரில் கிடக்கிறது. இதுகுறித்து அவர் கடைகாரரிடம் கேட்கிறார். ஒரு நிமிட அளவில் வீடியோ ஓடுகிறது. இந்த வீடியோ அனைத்து தரப்பினர் குரூப்களிலும் பதிவிடப்பட்டு வருவதால் மக்களிடையே ஒரு வித அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது.
ஆதலால் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஹோட்டல் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும். உணவு பாதுகாப்பு இல்லாமலும், ஹோட்டல்கள் சுகாதாரம் குறைவாக இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தான்குளம் பகுதியில் உள்ள பேக்கரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்து சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடதக்கது.