அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளராக ஶ்ரீவை சுரேஷ் தேர்வு!

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளராக ஶ்ரீவை சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளராக ஶ்ரீவை சுரேஷ் தேர்வு!

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளராக ஶ்ரீவை சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில இளைஞரணி தலைவராக உள்ள ஶ்ரீவை சுரேஷ் அகில இந்திய தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேசிய பொதுச் செயலாளர் தேவராஜன் மற்றும் தேசிய தலைவர் நரேன் நட்டர்ஜி ஆகியோர் அறிவித்தனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஶ்ரீவை சுரேஷ், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பணியை தொடங்கிய பின்னர் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது இடத்தை பிடித்தார். மாநில இளைஞரணி தலைவராக உள்ள ஶ்ரீவை சுரேஷ் தற்போது தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஶ்ரீவை சுரேஷ் கூறுகையில்,அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் என்னோடு பயணிக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.சுபாஷிசமே எதிர்காலம் என்பதை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியான பணிகள், உண்மையான செயல்பாடுகள், உறுதியான உழைப்பு என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார்.